நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஃபேஸ்புக் காதலால் பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞர்

புது டெல்லி:  

ஃபேஸ்புக்கில் பழகிய பெண்ணை திருமணம் செய்ய பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய உத்தர பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த பாதல் பாபு என்ற இளைஞர் அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் வழியாக எல்லையைக் கடந்து பாகிஸ்தானின் மௌங் கிராமத்தில் வசித்து வந்த சனா ராணி வீட்டிற்கு பாபு கடந்த டிசம்பர் 28ம் தேதி வந்தபோது கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்தனர்.

எனினும், சனா அளித்த வாக்குமூலத்தில், கடந்த இரண்டரை வருடங்களாக பாபுவுடன் ஃபேஸ்புக்கில் நண்பராகப் பழகி வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பாபு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சிறையில் உள்ள தனது மகனை பிரதமர் மோடி தலையிட்டு மீட்க வேண்டும் என்று பாபுவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset