நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டியூசன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம்: 

கேரளத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக டியூஷன் ஆசிரியர் மனோஜுக்கு  111 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவனந்தபுரத்தின் அம்பலத்தரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் டியூஷன் படித்த பிளஸ்1 மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி,  அதை புகைப்பட பதிவு செய்து மிரட்டியுள்ளார்.

மாணவி டியூஷன் வருவதை நிறுத்தியதால் அந்தப் படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தில் மனோஜை போலீஸார் கைது செய்ததால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

இந்தவழக்கில் ஒட்டுமொத்தமாக மனோஜுக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset