நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளம் சிறிய பாகிஸ்தான்: பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

மும்பை:

ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் சிறிய பாகிஸ்தான் என்று பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதீஷ் ராணே பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது

2024 தேர்தலில் கேரளத்தின் வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி வென்றதையடுத்து, வயநாட்டில் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த மாத இறுதியில் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ராகுலின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.

இதைக் குறிப்பிட்டு நிதீஷ் ராணே பேசுகையில், கேரளத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதமாற்றங்களும், லவ் ஜிஹாத்களும் அங்கு அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, அதேபோன்ற சூழல் கேரளத்திலும் உருவானால் என்னவாகும்.ஹிந்துக்களின் தேசம் ஹிந்துக்களின் தேசமாகவே நீடிக்க வேண்டும். ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் சிறிய பாகிஸ்தான் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset