நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

40 ஆண்டுகளுக்கு பிறகு போபால் நச்சுக் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்

போபால்: 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னர், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்த விஷவாயுவால் 5,479 பேர் உயிரிழந்தனர்.பலர் நிரந்தர ஊனமாகிவிட்டனர்.

சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் 40 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளன.

உயர்நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளுக்கு பிறகு மாநில அரசு அதிகாரிகள்  அந்தக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக ஆலைக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட கண்டெய்னர் வாகனங்களில் போபாலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் இந்தூர் அருகே பீதம்பூர் பகுதியில் உள்ள கழிவுகள் எரிப்பு களத்துக்கு நச்சுக் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டு 9 மாதங்களுக்குள் எரிக்கப்ட உள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset