செய்திகள் மலேசியா
பத்துமலை மேல்குகைக்கு செல்வதற்கான மின் படிக்கட்டு கட்டுமானம் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கும்: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலையில் மின் படிக்கட்டு கட்டுமானம் வரும் ஜனவரி 25ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கவுள்ளது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
பத்துமலை மேல்குகைக்கு செல்வதற்கு மின் படிக்கட்டு கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி அண்மையில் பத்துமலைக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
அவரிடம் இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து முழுமையாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான மாநில அரசின் ஒப்புதல் கடிதத்தை வரும் 2025 ஜனவரி 19ஆம் தேதி வழங்குவதாக அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இவ்வேளையில் மாநில அரசுக்கும் மந்திரி புசாருக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் அடிப்படையில் மின் படிக்கட்டு கட்டுமான பணி அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி என் தலைமையில் நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டு தைப்பூச விழாவிற்கு முன் இந்த மின் படிக்கட்டு திட்டத்தை பூர்த்தி செய்ய தேவஸ்தானம் இலக்கு கொண்டுள்ளது.
முருகப்பெருமானுக்கு நடைபெற்ற பன்னீர் அபிஷேக விழாவிற்கு பின் செய்தியாளர்கள் பேசிய டான்ஸ்ரீ நடராஜா இதனை கூறினார்.
10 மலையில் அமைந்துள்ள 140 அடி முருகன் சிலைக்கு ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்று பன்னீர் அபிஷேக விழா நடத்தப்படுகிறது.
அடுத்த ஆண்டு இது பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை எட்டுகிறது.
ஆகையால் இந்த பன்னீர் அபிஷேக விழாவை இன்னும் விமர்சையாக கொண்டாட தேவஸ்தானம் இலக்கு கொண்டுள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 4, 2025, 10:49 am
உப்பு உட்கொள்வதற்கு எதிரான பிரச்சாரத்தைச் சுகாதார அமைச்சு இவ்வாண்டில் அமல்படுத்தவுள்ளது
January 4, 2025, 10:48 am
அதிகமான நிபுணர்களைப் பணியில் அமர்த்த சுகாதார அமைச்சு திட்டம்: ஜுல்கிஃப்லி அஹமத்
January 3, 2025, 11:10 pm
BREAKING NEWS: மாமன்னர் உத்தரவுக்கு மதிப்பளித்து பேரணியை அம்னோ ரத்து செய்கிறது: அஸ்ரப்
January 3, 2025, 9:51 pm
மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்து, பேரணிகளில் பங்கேற்க வேண்டாம்: ஐஜிபி
January 3, 2025, 7:18 pm
ஆசியான் தொழிலாளர் கூட்டமைப்புக்கு எம்இஎஃப் தலைமையேற்கிறது: டத்தோ சைட் ஹுசைன்
January 3, 2025, 6:35 pm
நஜிப் ஆதரவு பேரணி ஒற்றுமை அரசாங்கத்தைப் பாதிக்காது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 3, 2025, 5:55 pm