செய்திகள் மலேசியா
சௌக்கிட் ஸ்பா மையம் சோதனை: ஒழுங்கற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக ஏஜியின் அறிவுறுத்தல்களுக்காக போலிசார் காத்திருக்கிறார்கள்
கோலாலம்பூர்:
சௌக்கிட்டில் நடந்த ஒழுங்கற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக சட்டத்துறை தலைவரின் அறிவுறுத்தல்களுக்காக போலிசார் காத்திருக்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.
கடந்த நவம்பரில் இங்குள்ள சௌக்கிட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நபர்கள் மீதான தொடர் நடவடிக்கை தொடர்பாக ஏஜியில் அலுவலகத்திலிருந்து மேலும் அறிவுறுத்தல்களுக்காக போலிஸ் இன்னும் காத்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை 2025 டிசம்பர் 17ஆம் தேதியன்றூ அன்று ஏஜி அலுவலகத்திற்கு மறுஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சௌக்கிட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட மொத்தம் 171 பேரில் ஒரு உள்ளூர் ஆண் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை போலிஸ் பல சட்ட விதிகளின்படி திறந்துள்ளது என்று அவர் நாடாளுமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 11:58 am
சட்டவிரோத வழிபாட்டுத் தள எதிர்ப்பு பேரணியைத் தடுக்க ஐஜிபி தலையிட வேண்டும்: எம்ஐபிபி
February 5, 2026, 11:58 am
கோத்தா திங்கியில் 33 பேருக்கு காசநோய் தொற்று உறுதி: 804 பேருக்கு பரிசோதனை
February 5, 2026, 10:45 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பாதுகாப்பு நிறுவன லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்
February 5, 2026, 10:28 am
பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து, இரண்டு லோரிகள் உட்படுத்திய விபத்தில் 31 பேர் பாதிப்பு
February 5, 2026, 7:17 am
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கோலாலம்பூர் இலங்கைத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
February 4, 2026, 7:36 pm
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது முறையாக மலேசியா வருகை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்திக்கிறார்
February 4, 2026, 3:56 pm
