நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா திங்கியில் 33 பேருக்கு காசநோய் தொற்று உறுதி: 804 பேருக்கு பரிசோதனை

கோலாலம்பூர்:

கோத்தா திங்கியில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி காசநோய் பரவல் இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அஹ்மத் இதனை கூறினார்.

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி  நிலவரப்படி 804 நெருங்கிய தொடர்புகளில் இருந்து மொத்தம் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகாதார அமைச்சின் குழு தற்போது களத்தில் உள்ளது. தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாசிட்டிவ் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். சுகாதார அமைச்சால் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக இந்த கிளஸ்டரில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. ஆனால் அது காசநோய் தொற்று காரணமாக இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset