நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி மகன் மீதான தாக்குதலில் இஸ்மாயில் சப்ரியை தொடர்புபடுத்தும் அவதூறு வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாது என வகைப்படுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர்:

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி மகன் மீதான தாக்குதலுடன் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை தொடர்புபடுத்தும் அவதூறு வழக்கு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்துறை தலைவர் அலுவலகம் இம்முடிவை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

2015  ஆகஸ்ட் 18ஆம் தேதியிட்ட டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் ஒரு  புகார்  கிடைத்தது.

போலிஸ் இந்த வழக்கில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500, தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்தது.

விசாரணை அறிக்கை  2025 டிசம்பர் 23ஆம் தேதி ஏஜிடிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் ஏஜிசி இந்த வழக்கை மேலும் நடவடிக்கை இல்லை என வகைப்படுத்த முடிவு செய்தது என்று அவர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset