
செய்திகள் இந்தியா
பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு, குறைந்த சொத்து மதிப்புள்ள முதல்வர் மம்தா பானர்ஜி
புது டெல்லி:
இந்தியாவிலேயே ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பணக்கார முதல்வராகவும், ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் குறைவான சொத்துள்ள முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் ADR வெளியிட்ட ஆய்வு அறிக்கையில்,மொத்தம் 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாகும்.
சந்திரபாபு நாயுடுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டுவும், ரூ.51 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் ரூ.46 கோடி சொத்து மதிப்புடன் நாகாலாந்து முதல்வர் நிபியூ ரியோ, ரூ.42 கோடி சொத்து மதிப்புடன் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ரூ.38 கோடி சொத்து மதிப்புடன் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, ரூ.30 கோடி சொத்து மதிப்புடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ரூ.25 கோடி சொத்து மதிப்புடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ரூ.8.8 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 14வது இடத்தில் உள்ளார். அவருக்கு கடனில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm