நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மனிதக் கடத்தலுக்கு எதிர்ப்பு விழிப்புணர்வு:  10 கிலோமீட்டர் ஓடவிருக்கிறார் பிஎஸ். ரஞ்சன்

பெட்டாலிங் ஜெயா:

மனிதக் கடத்தல் , கொத்தடிமை  ஒழிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தாம் முன்னெடுக்கும் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலரான பிஎஸ்.ரஞ்சன், இந்த ஆண்டும் தனது முயற்சியைத் தொடருகிறார்.

73 வயதான ரஞ்சன் இந்த முறை தனது மகன் ஆனந்த், மூத்த வழக்கறிஞர் சேரியன் குரிவில்லாவும் இணைந்து ஓடவிருக்கிறார்கள்.

இந்த ஓட்டம்,  டாமன்சாராவில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கி, புக்கிட் பெர்செத்துவன் வரை சென்று திரும்பும் . இது நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

2023ஆம் ஆண்டு, ரஞ்சன் தனது மூத்த மகன் பிரசாத்துடன் இந்த 10 கிலோமீட்டர் ஓட்டத்தை முடித்தார். அப்போது அவர் சுமார் RM40,000 நிதி திரட்டி, உலகின் பழமையான மனித உரிமைகள் அமைப்பான Anti-Slavery International-க்கு வழங்கினார்.

கடந்த ஆண்டு, அவர் தனியாக ஓடினார், ஆனால் நிதி திரட்ட முயற்சிக்கவில்லை. இந்த ஆண்டும் அவர் நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுக்கவில்லை.

“நான் இதை தனிப்பட்ட முறையில் நடத்த முடிவு செய்துள்ளேன், ஏனெனில் பொது வெளி நடவடிக்கைகளுக்கு அனுமதிகளை பெற வேண்டிய அவசியம் இல்லை,” என அவர் கூறினார்.

இம்முறை, 90 முதல் 105 நிமிடங்களில் தூரத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார், ஆனால் சாலையின் நிலைகள், குறிப்பாக உயர்வுகள், சவாலாக இருக்கலாம் என அவர் கூறினார்.

Anti-Slavery International-ல் 30 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள ரஞ்சன், தனது “சுதந்திரத்திற்கான ஓட்டம்” மனிதக் கடத்தல், கொத்தடிமை வேலைசெய்யும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset