நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாளை விண்ணில் பாயும் PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்டவுன் இன்று தொடக்கம் 

பெங்களூரு:

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் இன்று இரவு அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்குகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 

இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்டவுன்’ இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்க உள்ளது. 

இந்த ராக்கெட்டில் ‘ஸ்பேடெக்ஸ்-ஏ’. ‘ஸ்பேடெக்ஸ்-பி’ என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.

பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset