நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்எச் 370 விமானத்தை தேடுதல் பணி பலனைத் தந்தால்  ஒத்துழைக்க அரசு தயாராக உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 370 தேடுதல் பணி பலனைத் தந்தால் அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதியளித்தார்.

விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேவையை அரசாங்கம் சமப்படுத்த வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் பொது நிதி விவேகத்துடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், இன்னும் பல கேள்விகள், மர்மங்கள் தீர்க்கப்படவில்லை.

குடும்பங்கள், வாரிசுகள் மட்டுமல்ல எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெற மக்களுக்கும் உரிமை உண்டு.

எனவே, எதிர்பார்த்த பலனைத் தருவதில் தேடல் வெற்றி பெற்றால், அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று அவர் இன்று முகநூலில் இதனை பதிவிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset