நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 97 பெட்ரோலின் விலை 3 சென் உயர்வு: ரோன் 95 விலை நிலை நிறுத்தப்பட்டது

புத்ராஜெயா:

ரோன் 97 பெட்ரோலின் விலை 3 சென் உயர்ந்துள்ள வேளையில் ரோன் 95 விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

ரோன் 97 பெட்ரோலின் விலை 3.22 ரிங்கிட்டில் இருந்து 3.25 ரிங்கிட்டாக விலை உயர்ந்துள்ளது.

அதே வேளையில் ரோன் 95 பெட்ரோலின் விலை 2.05 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவின் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு டீசல்  2.95 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சபா, சரவா, லாபுவானில் லிட்டருக்கு  2.15 ரிங்கிட்டுக்கு விற்கப்படவுள்ளது.

இந்த புதிய கட்டணம் வரும் ஜனவரி 1ம் தேதி வரை அமலில் இருக்கும்.

அரசாங்கம் சந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

பெட்ரோல் சந்தை விலைகளின் நகர்வைக் கருத்தில் கொண்டு டீசலின் சில்லறை விலையை ஒருங்கிணைத்து, மக்களின் நலன், நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய விலை நிலை நிறுத்தப்படும் என்று நிதியமைச்சு கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset