நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூச்சிங்கில் படகு கவிழ்ந்து விபத்து: பாதிக்கப்பட்ட மீனவரைக் காணவில்லை 

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தின் கூச்சிங்கில் உள்ள புலாவ் புரோங்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அறுவரில் ஐவர் காப்பாற்றப்பட்டனர். 

இந்நிலையில், ஒரு மீனவர் மட்டும் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. அவரைத் தேடி மீட்கும் பணிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மீட்கப்பட்ட ஐந்து வெளிநாட்டவர்களும் கம்போடியா நாட்டையும் இந்தோனேசியா நாட்டையும் சேர்ந்தவர்களாவர் 

ஆனால், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. 

இருப்பினும், அவரைத் தேடி மீட்கும் பணிகள் இன்றும் தொடர்வதாக சரவாக் மாநில தீயணைப்பு மீட்புப்படை நடவடிக்கை பிரிவு பேச்சாளர் கூறினார். 

முன்னதாக கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தஞ்சோங் பாகோவிலிருந்து புறப்பட்ட படகு ஒன்று டிசம்பர் 20ஆம் தேதி அதன் தொடர்பினை இழந்தது. இதனால் தேடி மீட்கும் பணிகள் விரிவுப்படுத்தப்பட்டன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset