நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோழித் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவரை போலிசார் கைது செய்தனர்

தாப்பா:

கோழி திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவரை போலிசார் கைது செய்தனர்.

தாப்பா போலிஸ்படைத் தலைவர் முஹம்மத் நைம் அஸ்னாவி இதனை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை தாப்பாவை சுற்றி கோழி திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனால் கிட்டத்தட்ட 27,000 ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டது,

இச்சம்பவம் தொடர்பில் மூன்று நபரை போலிசார் கைது செய்தனர்.

33 முதல் 43 வயதுக்கு உட்பட்ட அம்மூவரும் கடந்த டிசம்பர் 23 அன்று சிலாங்கூர் ரவாங்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் கோழிகளை திருடி ரவாங் சந்தையில் விற்பனை செய்வதற்கு சொந்தமாக அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட லோரிகளை பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் இருவர் டிசம்பர் 27ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு ஆடவரின் தடுப்பு காவல் நிறைவடைந்து விட்டது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset