நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா, கிளந்தான், திரெங்கானுவில் சனிக்கிழமை முதல் தொடர் மழை பெய்யும்: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

சபா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை முதல் தொடர் மழை பெய்யும்.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா இதனை கூறியது.

சபாவில் தம்புனன், தாவாவ், லஹாட் டத்து, சண்டக்கான், கினாபாத்தாங்கான், பெலுரான், சண்டகான், குடாட் ஆகிய பகுதிகளில் இத்தாக்கம் அதிகம் இருக்கும்.

கிளந்தானில் தும்பாட், பாசிர்மாஸ், கோத்தாபாரு, ஜெலி, தானாமேரா, பாச்சோக், பாசிர் பூத்தே ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரெங்கானு முழுவதும் இதே வானிலை இருக்கும் என்று  மெட் மலேசியா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset