நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்  மலேசியர்களின் சொத்தாக இருக்க வேண்டும்; அதை விற்றுவிடாதீர்கள்: ஹம்சா

கோலாலம்பூர்:

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மலேசியர்களின் சொத்தாக இருக்க வேண்டும். அதை விற்றுவிடாதீர்கள் 

தேசியக் கூட்டணி துணைத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் பங்குகளை விற்பதற்கு தேசியக் கூட்டணி நிறுவனம் தங்கள் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலும் நிறுவனத்தின் சுயாதீன நிர்வாகமற்ற இயக்குநர்களும் கையகப்படுத்தும் வாய்ப்பையும்  நிராகரித்துள்ளனர்.

அதன் பங்குகள் விற்பனை செய்வதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

மேலும் வெளிப்படைத்தன்மை, நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் புர்சா மலேசியாவில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனமாக இருக்க வேண்டும்.

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தங்க வாத்தாக கருதப்படுகிறது.

நாட்டின் முக்கியமான சொத்துக்களில் ஒன்றாக அது மலேசியர்களின் சொத்தாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset