நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்

கோலாலம்பூர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை மலேசியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்.

மஇகா உதவித் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் இதனை வலியுறுத்தினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இவ்வேளையில் இப் பண்டிகையை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள். உலகிற்கு அமைதியையும் சமாதானத்தையும் போதித்த ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளில் அவரது போதனைகளை பின்பற்றி நாம் நடக்க வேண்டும்.

அதே வேளையில் அனைத்து பெருநாளையும் பல்லின மக்கள் கொண்டாடுவது தான் மலேசியாவின் சிறப்பு அம்சமாகும்.

அவ்வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் மடானி சிந்தனைக்கு ஏற்ப, அனைத்து வேற்றுமையையும் ஒதுக்கிவைத்து,

அதேவேளையில் சீராகவும் சிக்கனமாகவும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று டத்தோ நெல்சன் கேட்டு கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset