நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமராஜ், பௌஸான் ஆகியோர் சார்ஜென்டாக  பதவி உயர்வு பெற்றனர்

கோலாலம்பூர்:

அனைத்துலக சீலாட் போட்டியில் சாதித்த தமராஜ், பௌஸான் ஆகியோர் ஆயுதப்படையில் காப்ரலில் இருந்து சார்ஜனாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மலேசிய ஆயுதப் படைகளின் சிலாட் சங்கத்தின் செயலாளர் மேஜர் நூர்யாஹிதாவதி அப்துல்லா சானி இதனை கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் உலக பென்காக் சிலாட் சாம்பியன் போட்டி நடைபெற்றது.

இதில் களமிறங்கிய  தேசிய சீலாட் வீரர் வி. தமராஜ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

அதே வேளையில் மற்றொரு வீரரான பௌஸான் ஹாடியும் தங்கப்பதக்கம் வென்றார்.

இவர்களின் வெற்றியை கொண்டாடுவதுடன் அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் காப்ரலில் இருந்து சார்ஜனாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இப் பதவி உயர்வு ஜனவரி 2ஆம் தேதி அமலுக்கு வருகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset