நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம் நாட்டுக் கலைஞர்கள் தமிழக கலைஞர்களுக்கு ஈடாக தங்களின் கலைத்துறையை மேம்படுத்தி வருகின்றனர்: மலேசிய இந்தியக் கலை கலாச்சார படிக விருது விழாவில் வ. சிவக்குமார்

ஈப்போ: 

நாட்டில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பது மிக அவசியம், அந்த வகையில் இன்று நாட்டில் கலைஞர்கள் பலர் தமிழக கலைஞர்களுக்கு ஈடாக தங்களின் கலைத்துறையை மேம்படுத்தி வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக பாராட்டினார் மேனாள் அமைச்சரும், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார்.

அதே சமயத்தில் உள்நாட்டு வானொலி, தொலைக் காட்சிகள் மலேசிய கலைஞர்களை ஊக்குவிப்பதை அவர்களின் படைப்புகளை  வெளியிட்டு வருவதை அவர் வரவேற்றார்.

ஒரு காலத்தில் மலேசிய கலைஞர் படைப்புகள் வானொலி, தொலைக் காட்சிகளில்  வெளியிடும்போது அதனை பார்ப்பது மிகவும் குறைவாக இருந்தது. இன்று இந்த நிலை மாறி அதிகமான மக்கள் அதனை வரவேற்கும் வகையில் ஆதரவு வழங்கி வருவதைக் காண முடிவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மலேசிய இந்திய பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார படிக விருது விழா நிகழ்வில் பேசிய நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஆ.  சக்திவேல், இந்த விருதளிப்பு விழா இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது .உள்நாட்டு கலைஞர்கள் பலர் கலைத் துறையில் மேலும் மேம்பாடு காண இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும்  மற்றும் இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும்  நிகழ்வு ஏற்பாட்டுக் குழு சார்பில் பேராக் கிந்தா  மாவட்டத்தின் இந்திய கலைச்சார இயக்கம் தலைவர் ஏ. ஆர். கண்ணியரசு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்விற்கு வ. சிவகுமார் 15 ஆயிரம் ரிங்கிட் நிதி அறிவிப்பை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரா மாநில பொருளாதார மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் ஏற்பாட்டில், பேராக் கிந்தா மாவட்டத்தின் இந்திய கலைச்சார இயக்கம், பெசோனா நிறுவனத்தின் ( PESONA KCK (M) SDN. BHD ) தலைவர் ஜி. கேசவன்  உட்பட பலரின் பேராதரவுடன் நடத்தப்பட்டது 

இந்நாட்டிலுள்ள கலைஞர்கள், தமிழகம், சிங்கப்பூரில் இருந்தும் வருகை புரிந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நடனம் , பரதம், பாடல், நாடகம், நடப்பு,  இசை, தயாரிப்பு, பாடலாசிரியர் உட்பட சிறந்த  இந்திய கலைஞர்கள் சம்பந்தப்பட்ட கலைகளுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset