நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் - சிங்கப்பூர் சாங்கி, பரபரப்பான சர்வதேச விமான வழித்தடம் இல்லை: அதிகாரப்பூர்வ ஏர்லைன் வழிகாட்டி(OAG)

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை உலகின் பரபரப்பான சர்வதேச விமான வழித்தடங்கள் பட்டியலில் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் சாங்கி செல்லும் விமான பாதை பரபரப்பான சர்வதேச விமான பாதையாக இல்லை என்பதை அதிகாரப்பூர்வ ஏர்லைன் வழிகாட்டி(OAG) இன் வருடாந்திர மதிப்பிட்டில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பரபரப்பான சர்வதேச விமான வழித்தடமான கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் சாங்கி செல்லும் விமான பாதை 5.4 மில்லியன் விமான இருக்கைகளுடன் நான்காவது இடத்திற்கு சரிந்தது. இது வெறும் 28,293 என்ற விமான இருக்கை எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது இடத்திற்கு 0.5 விழுக்காடில் பின்னால் உள்ளது.

இருப்பினும், இந்தக் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் சாங்கி செல்லும் விமான வழித்தடம் இன்னும் 2023 ஆம் ஆண்டு விமான பாதை பயன்பாடு நிலைகளை விட 10 விழுக்காடும், 2019 ஆம் ஆண்டு விமான பாதை பயன்பாடு நிலைகளை விட மூன்று விழுக்காடாகவும் குறைவாக இருந்தது.

2024 ஆம் ஆண்டிற்கான முதல் 10 பரபரப்பான சர்வதேச வழித்தடங்களில் பெரும்பாலான வழித்தடங்கள் ஆசியாவில் உள்ளன. அதில், மொத்தம் ஏழு வழித்தடங்கள் இருந்தன என்று OAG குறிப்பிட்டது

-மவித்திரன் & நந்தினி ரவி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset