நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் தனியாக இருந்த 68 வயது முதியவர் மரணம்: ஈப்போவில் சம்பவம்

ஈப்போ: 

தெற்கு ஈப்போ கார்டனில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 68 வயது முதியவர் இறந்து கிடந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேராக் மாநிலத்தின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நூர் அஹ்மாட் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தனது வீட்டின் குளியலறையில் சாய்ந்த நிலையில் கிடந்ததாகவும் பாதிக்கப்பட்டவரின் நண்பர் 999 அவசர உதவி எண்ணுக்கு அழைத்து உதவியை நாடியதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சடலம் மேற்கட்ட விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த சம்பவம் ஈப்போ மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

-மவித்திரன் & கௌசல்யா ரவி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset