நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்திறன் உயர்வு கண்டுள்ளது: மெர்டேகா ஆய்வு மையம்

புத்ராஜெயா:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் மதிப்பீட்டு ஆய்வு 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மெர்டேகா ஆய்வு மையம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான  அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சிறப்பாக உள்ளது என்று மக்கள் கூறி உள்ளனர். அரசாங்கத்தின் செயல்திறன் 54 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மெர்டேக்கா மையத்தின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. 

அது கடந்த ஆண்டில் 50 சதவீதத்தில் இருந்தது.

மடானி அரசாங்கம் 53 சதவீதம் பேர் நாடு தவறான திசையில் செல்கிறது. இது முன்பு இருந்த 54 சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது. 

பல பகுதிகளில் பிரதமரின் செயல்திறனில் வாக்காளர்கள் பொதுவாக திருப்தி அடைந்ததாக மெர்டேகா மையம் கூறியது.

ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து கேட்டபோது கலவையான மதிப்பீட்டை அளித்தனர்.

அதன் சமீபத்திய கணக்கெடுப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் அன்வாரின் முயற்சிகளில் வாக்காளர்கள் பெரும்பாலும் திருப்தி அடைந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து மலேசியாவின் தோற்றத்தை பன்னாட்டளவில் மேம்படுத்துதல், சிவில் சேவையை மேம்படுத்துதல், இறுதியாக பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் திருப்தி அடைந்துள்ளனர் என அம் மையம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset