
செய்திகள் ASEAN Malaysia 2025
வெளியுறவு அமைச்சர்களுக்கான ஆசியான் கூட்டு ஆலோசனை மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்கிறார்
கோலாலம்பூர்:
பேங்காக் தாய்லாந்தில் நடைப்பெற்ற வெளியுறவு அமைச்சர்களுக்கான ஆசியான் கூட்டு ஆலோசனை மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹாசன் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் பேங்காக் சென்றுள்ளார் என வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.
இந்த ஆலோசனை அமர்வைப் பொறுத்தவரை, ஆசியான் கூட்டு வெளியுறவு அமைச்சர்கள், ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
மியான்மரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கையாள்வதில் ஆசியானின் ஒட்டுமொத்த முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படும்,
மேலும் 5பிசி எனப்படும் ஐந்து, புள்ளி ஒருமித்த கருத்தைச் செயல்படுத்துவதற்கான திசையில் ஆலோசனை இந்த அமர்வில் கவனம் செலுத்தபடும்.
மேலும் 2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்கும் போது,
மியான்மரில் நிலவும் மோதலைக் கையாள்வதில் எடுக்கப்படும் அணுகுமுறையை இந்தச் சந்திப்புகளின் போது மலேசியா பகிர்ந்து கொள்ளும்.
மியான்மர் நெருக்கடியைக் கையாள்வதிலும், பிராந்திய அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆசியானின் முக்கியப் பங்கை இந்த ஆலோசனை தொடர்ந்து வலியுறுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கௌசல்யா ரவி
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
June 19, 2025, 12:27 pm