
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வச் சாலைகளைத் தயார் செய்யும் பணி நடைபெறுகின்றது: அலெக்சாண்டர் நந்தா
காஜாங்:
2025-ஆம் ஆண்டின் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வச் சாலைகளைத் தயார் செய்யும் பணி நடைபெறுகின்றது என்று பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
மேலும், உச்சநிலை மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வச் சாலைகள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த இந்தச் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறப்பு ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு முன்பாகவே பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.
தொடர்ந்து, மாநாட்டிற்கு வரும் முக்கியத் தலைவர், உயர் அதிகாரிகள் ஆகியோர் பயணிக்கும் சாலைகளின் உள்கட்டமைப்புகளைச் சரி செய்யப்பட்டு வருகின்றன.
- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை