நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெங்கு மக்கோத்தா பகாங்கை திருமணம் செய்யப்போவதாக கூறிய பெண்ணை போலிசார் கண்காணித்து வருகின்றனர்

குவாந்தான்:

பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹஸ்னால் இப்ராஹிமை திருமணம் செய்து கொள்வதாக கூறிய பெண்ணை போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

பகாங் போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஒத்மான் இதனை கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500, தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி  போலிசார் விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளனர்.

போலிஸ் அதிகாரிகள் இந்த விவகாரத்தை விசாரித்து வருகின்றனர்.

மேலும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை தெங்கு ஹசனாலும் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்ட அரச திருமணத்தைப் பற்றிய வைரலான செய்தியை பகாங் அரண்மனை மறுத்தது.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்த திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset