நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிதி திரட்டும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் பாப்பாகோமோ கைது

கோலாலம்பூர்:

நிதி திரட்டும் மோசடி வழக்கில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பாபாகோமோ எனும் வலைப் பதிவாளர் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸை போலிசார் இன்று கைது செய்தனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் புக்கிட் அமான் பணமோசடி குற்றப் புலனாய்வுக் குழுவின் அம்லா உறுப்பினர்கள் குழுவால் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

41 வயதான வான் முஹம்மது அஸ்ரி ஒரு நிறுவனத்தின் பெயரைக் பயன்படுத்தி நிதி சேகரித்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜுலை மாதம் அமைச்சர் ஒருவர் செய்த போலிஸ் புகாரை  தொடர்ந்து  இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முன்னதாக தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைனை தொடர்பு கொண்டபோது, ​​கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset