நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது: காவல்துறையினர் அதிரடி

ஹைதரபாத்: 

புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார் 

தெலுங்கானா போலிசார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

போலிசாரிடம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நடிகர் அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சிக்காக அங்கு வந்ததால் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். 

மேலும், சந்தியா திரையரங்கம் அனுமதியின்றி சிறப்பு காட்சிகளைத் திரையிட்டதற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதையடுத்து தெலுங்கு திரையுலகம் பரபரப்புக்கு உள்ளானது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset