
செய்திகள் மலேசியா
2018 -ஆம் ஆண்டு முதல் போத்தா(POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரில் 4 பேர் வெளிநாட்டவர்களாவர்: சைஃபுடின்
கோலாலம்பூர்:
தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 2015 (POTA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 18 வயதுக்கும் மேற்பட்ட 13 பேரில் நான்கு பேர் வெளிநாட்டினராவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
மேலும், 2018-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இவர்கள் தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போத்தா(POTA) சட்டம் 2015 இன் கீழ் நடைமுறைகள் தீவிரவாத தடுப்பு வாரியத்தால் வழங்கப்பட்ட தடுப்புக்காவல் அல்லது கட்டுப்பாட்டு உத்தரவுகளை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மூன்று பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
2019 ஆம் ஆண்டில், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், இரண்டு பேர் வெளிநாட்டவர்கள்.
மேலும், 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணும், 2022 ஆம் ஆண்டில் மற்றொரு ஆணும் கைது செய்யப்பட்டதாக சைஃபுடின் மேலும் கூறினார்.
ஜனவரி 2018 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை போத்தாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் வழக்குத் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கையையும் குறித்து அமைச்சகத்திடம் கேட்ட சோ யூ ஹுய் (PH -RAUB ) கேள்விக்குப் பதிலளிக்கும் போது சைஃபுடின் இவ்வாறு கூறினார்.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm