
செய்திகள் உலகம்
துருக்கியிலிருந்து டெல்லி, மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு
இஸ்தான்புல்:
துருக்கியிலிருந்து டெல்லி, மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையத்தில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ், லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
விமானப் பயணிகளில் ஒருவர் தனது பதிவில் முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை.
இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am