நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரண்டாவது முறையாகச் சிறந்த மனிதராக டொனால்ட் டிரம்ப் தேர்வு: டைம் இதழ் அறிவிப்பு

வாஷிங்டன்: 

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்.

இரண்டாவது முறையாகச் சிறந்த மனிதராக டொனால்ட் டிரம்ப் மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

முன்னதாக, ஏற்கனவே, கடந்த 2016-ஆம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் டிரம்ப் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வெளிவரும் ஆங்கில வார இதழான 'டைம்' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு மிக்க நபரைத் தேர்வுசெய்து டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருகின்றது.

இதற்காக சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச்சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுக்கும். அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளிவரும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset