
செய்திகள் உலகம்
நட்சத்திர ஆமைகளுடன் சிக்கிய இந்தியருக்கு சிங்கப்பூரில் 16 மாதம் சிறை
சிங்கப்பூர்:
இந்திய வன உயிரிகள் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இந்திய பயணிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
அப்துல் ஜாஃபர் ஹாஜி அலி என்பவர் சென்னையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி விமானம் மூலம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவர் அங்கிருந்து வேறொரு விமானத்தில் ஜாகர்தாவுக்கு பயணிக்க இருந்த நிலையில் அவர் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது.
அப்போது அவரது ஒரு பேகில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள 58 இந்திய நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிய வந்தது.
உடனே விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடத்திய சோதனையில், அவர் கடத்தி வந்த ஆமைகளில் ஒன்று இறந்து கிடந்துள்ளது. மேலும் 22 ஆமைகள் எடை குறைந்து காணப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இறக்குமதி ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ள ஆமைகளை கடத்தி, துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் அப்துல் ஜாஃபர் ஹாஜி அலிக்கு ஒரு வருடம் நான்கு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm