நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவ அதிகாரிகள் மீதான 4 பகடிவதை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

மருத்துவ அதிகாரிகள் மீதான் 4 பகடிவதை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை 355 பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணையின் அடிப்படையில் பகடிவதை தொடர்பான நான்கு புகார்கள் நியாயமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பொது அதிகாரிகள்  விதிமுறைகள் 1993 அல்லது நடைமுறையில் உள்ள பிற விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில் ஆறு புகார்கள் உண்மையில் பகடிவதையா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும் நிரூபிக்கவும் விசாரணை கட்டத்தில் உள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset