செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை சரிந்து விழுந்தது மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவது: சசிதரன் கேள்வி
கிள்ளான்:
கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை சரிந்து விழுந்தது.
சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவது என்று சிலாங்கூர் மாநில மஇகா தலைமைச் செயலாளர் எம். சசிதரன் கேள்வி எழுப்பினார்.
சிலாங்கூர் மாநில மஇகாவின் கல்விக் குழு தலைவர் பாண்டியன், கோத்தா ராஜா தொகுதி உதவித் தலைவர் சுப்பிரமணியம், கோத்தாராஜா கிளைத் தலைவர் ராஜ்சிங் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றிருந்தேன்.
பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்த்ததுடன் கூரை சரிந்து விழுந்த வகுப்பறையையும் பார்வையிட்டேன்.
சம்பவம் நிகழ்ந்த தினம் விடுமுறை என்பதால் வகுப்பறையில் மாணவர்கள் இல்லை.
ஒருவேளை பள்ளி நேரமாக இருந்திருந்தால் மாணவர்களின் நிலை மோசமாகி இருக்கும்.
அதேவேளையில் இப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்க போவது தான் அனைவரின் கேள்வியாக்கும்.
ஆக இச் சம்பவத்திற்கு கல்வியமைச்சு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளின் நிலையை ஆராய பொதுப் பணித்துறைக்கு அது உத்தரவிட வேண்டும் என்று சசிதரன் வலியுறுத்தினார்.
இதனையே இப் பள்ளி மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மற்ற வகுப்பறைகளை ஆய்வு செய்ய ஒரு குத்தகையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நம் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்.
அவர்களின் கற்றல் சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 11, 2024, 8:08 pm
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமனம்
December 11, 2024, 8:05 pm
மருத்துவ கல்வி பயில்வதற்கு 50 மாணவர்களுக்கு மித்ரா கை கொடுக்கும்: பிரபாகரன்
December 11, 2024, 4:57 pm
அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் காணாமல்போன பக்கங்கள்: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கேள்வி
December 11, 2024, 3:41 pm
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்: மலேசியா கோரிக்கை
December 11, 2024, 12:39 pm
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த 27,000 அந்நிய நாட்டினர் தாயகம் திரும்பினர்
December 11, 2024, 12:38 pm
100 மில்லியன் மரங்கள்: மலேசியா சாதனை
December 11, 2024, 12:37 pm