நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவ கல்வி பயில்வதற்கு 50 மாணவர்களுக்கு மித்ரா கைகொடுக்கும்: பிரபாகரன்

புத்ரா ஜெயா:

மருத்துவ கல்வி பயில்வதற்கு 50 மாணவர்களுக்கு மித்ரா கைகொடுக்கவுள்ளது.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் பி.பிரபாகரன் இதனை கூறினார்.

மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மித்ரா இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்திற்கான மித்ரா, பெர்டானா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது.

மருத்துவ கல்வி பயில 10 மாணவர்களுக்கு முழு உபகாரச் சம்பளம் வழங்கப்படவுள்ளது.

அதே வேளையில் 40 மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளமும் பிடிபிடிஎன் கல்வி கடனுதவியை வழங்கப்படவுள்ளது.

மெட்ரிகுலேஷன் அல்லது எஸ்டிபிஎம் தேர்வில் அறிவியல் பிரிவில் 3.5க்கும் கூடுதலான புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

முவேட் எனப்படும் ஆங்கில மொழித் தேர்வில் குறைந்த பட்சம் பேன்ட் 4 பெற்றிருக்க வேண்டும்.

எஸ்பிஎம் தேர்வில் 5 அறிவியல் பாடங்களில் குறைந்த பட்சம் பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதே வேளையில் ரஹ்மா உதவித் திட்டத்தை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மித்ராவில் இந்த உதவியை பெற விரும்பும் மாணவர்கள் இன்று தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

இந்திய சமுகத்தின் கல்வி இலக்கை மாற்றும் மித்ராவின் இம்முயற்சியை மாணவர்கள் ழுழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset