நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டணம் செலுத்தாததால் குழந்தையின் உடலைத் தர மறுத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம்: குற்றச்சாட்டை மறுத்த ரஷிவ் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம்

கோலாலம்பூர்:

கட்டணம் செலுத்தாததால் குழந்தையின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரஷிவ் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

மருத்துவமனைக் கட்டணத்தை பெற்றோர் செலுத்தத் தவறியதால், இரண்டு வாரங்களாக ஒரு குழந்தையின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் வைரலானது.

இக் குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தையின் தாய் இது தனது முதல் பிரசவம் என்று கூறி பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் பிறப்புக்கு முந்தைய பரிசோதனையும் செய்யவில்லை.

அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அந்த பெண் பின்னர் ஒப்புக்கொள்வதற்கு முன்பு, நோயாளியை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

எந்தவொரு சோதனையும் செய்யப்படவில்லை என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்தில் அந்தப் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

துரதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு ஒரு கண், மூக்கு உட்பட பல பகுதிகளில் சிக்லோப் நோய்க்குறியால் பாதிக்கப்படுகிறது. 

மருத்துவ உதவி அளித்தும் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இறந்தது.

இந்த நேரத்தில் குழந்தையின் தந்தை எதையும் தெரிவிக்காமல் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டார்.

மறுநாள், குழந்தையின் தாயார் மருத்துவமனையில் மொத்த பில் தொகையான  2,480 ரிங்கிட் தொகையை செலுத்த முடியவில்லை என்றும், குழந்தையை அடக்கம் செய்வதை தனது கணவர் பார்த்துக் கொள்வார் என்றும் கூறினார்.

இப்படி அவரது கணவர் முழு ஒத்துழைப்பு தராத பட்சத்தில் தான் இந்த இழுபறி ஏற்பட்டது.

அதே வேளையில் அப் பெண் மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு உரிய சேவைகள் வழங்கப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset