செய்திகள் மலேசியா
100 மில்லியன் மரங்கள்: மலேசியா சாதனை
கோலாலம்பூர்:
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்கள் நடும் இலக்கை மலேசியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் 100 மில்லியனாவது மரத்தை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தாமான் ஹெர்பாவில் நட்டார்.
அப்போது பிரதமரின் மனைவியும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உடனிருந்தார்.
மலேசியாவின் தேசிய மெர்பாவ் மரத்தின் கன்றை அன்வார் நட்டார்.
ஐந்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் 100 மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மலேசியா கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கியது. 2025ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய வேண்டும்.
ஆனால், இவ்வாண்டிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
2021 ஜனவரி 5ஆம் தேதி மரக்கன்று நடும் பிரசார இயக்கம் தொடங்கியபோது மலேசிய கூட்டரசின் வனத்துறை, சரவா வனத்துறை, சாபா வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதற்கு ஒத்துழைப்பு அளித்தன.
பிரசாரத் திட்ட காலத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நாடு முழுவதும் நடப்பட்டன.
18 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதியை மலேசியா அடைந்து சாதித்துள்ளதாக இயற்கை வளம், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் நிலப்பகுதியில் 54.58 விழுக்காடு ஆகும்.
மரக்கன்று நடும் திட்டம் உயிரியல் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதோடு பருவநிலை மாற்ற தாக்கங்களை தணிக்கவும் உதவுவதாக அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 11:46 am
ஷாரா இறப்பதற்கு முன்பு கழிப்பறையில் ஹனாஃபி சட்டை அணிந்த நபரை மாணவி பார்த்துள்ளார்
October 28, 2025, 9:23 am
பிளாஸ்டிக் பையில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
October 28, 2025, 9:05 am
பகாங் தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து சைபுடின் நீக்கம்
October 27, 2025, 7:40 pm
அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்
October 27, 2025, 7:39 pm
டிரம்பிற்கான அதிகப்படியான வரவேற்பு மலேசியாவை சங்கடப்படுத்துகிறது: மொஹைதின்
October 27, 2025, 7:37 pm
தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா; நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும்: தேசம் குணாளன்
October 27, 2025, 7:35 pm
