நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் காணாமல்போன பக்கங்கள்: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கேள்வி

கோலாலம்பூர்: 

பத்து பூத்தே, பத்துவான் தெங்கா, துபிர் செலாத்தான் ஆகிய பகுதிகளின் இறையாண்மை தொடர்பாக RCI எனப்படும் அரச விசாரணை அறிக்கையில் உள்ள 27 பக்கங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் உரிமை கட்சியின் தலைவர் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார் 

சம்பந்தப்பட்ட 27 பக்கங்கள் காணாமல் போன விவகாரம் என்பது RCI விசாரணை அறிக்கையின் மீதான வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது

எதற்காக அரச விசாரணை ஆணையத்தில் அந்த 27 பக்கங்கள் காணாமல் போனது ? இதற்கு பின்னால் உள்ள அரசியல் நோக்கம் தான் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார் 

இந்த RCI அறிக்கையானது முழுக்க முழுக்க முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் அவர்களையே சுட்டுகின்றது. துன் மகாதீரைத் தவிர இதர அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிராக ஏன் RCI கேள்வி எழுப்பவில்லை என்று அவர் கேட்டார். 

இந்நிலையில், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்தி கொண்டு நடப்பு மடானி அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

முன்னதாக, பத்துபூத்தே விவகாரத்தில் ICJ வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மலேசியா தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று தனியாக தாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று துன் மகாதீர் நேற்று மறுப்பு தெரிவித்திருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset