நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு ஹாங்காங்கில் தீவிர மருத்துவப் பரிசோதனை 

ஹாங்காங்:

ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்குத் தீவிர சுகாதாரப் பரிசோதனையை ஹாங்காங் சுகாதார அதிகாரிகள் 
மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நோயொன்று காங்கோ குடியரசில் 79 பேரின் உயிரைப் பறித்ததுள்ளதாக ஐ நா சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனத்திடம் தகவல் கேட்டதாக ஹாங்காங் சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் சொன்னது.

அக்டோபர் மாதத்திலிருந்து அந்த மர்ம நோய் காரணமாக 79 பேர் மாண்டதாகவும் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், மூச்சுத் திணறல், ரத்த சோகை (anaemia) முதலிய அறிகுறிகள் தென்பட்டன.

தங்கள் நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கு மர்ம நோய் இருப்பதைப் பற்றித் தகவல் இல்லை என்று ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்தது.

காங்கோவிலிருந்து ஹாங்காங் செல்ல நேரடி விமானங்கள் இல்லையென்றாலும் ஆப்பிரிக்க நகரங்களின் வழியாக விமானங்கள் வருகின்றன.

அவற்றில் மருத்துவப் பரிசோதனை விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: South China Morning Post

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset