நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியா நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு: 10 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா: 

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால், மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால், 170-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.
 
இந்த நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் 172 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள், 539 ஹெக்டேர் நெல் வயல்களை மோசமாக பாதிப்படைந்துள்ளன. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

மோசமான வானிலையால் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், ஏறக்குறைய 1,000 மக்களை வெளியேற்றுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset