நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானிலிருந்து புதிய ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்கிறது ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி: 

ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஈரானின் புதிய  ஏவுகணை தாக்குதலைத் தற்போது எதிர்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

"ஈரானில் இருந்து வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் அலையை அமீரக வான் பாதுகாப்பு தற்போது கையாள்கிறது" என்று ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், “குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முழுமையான தயார்நிலையில் உள்ளோம்,” என அமைச்சகம் வலியுறுத்தியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து Teluk பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சமீபத்திய தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset