நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் அறிவிப்பு

டெஹ்ரான்:

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை என்றும்  ஈரான் கூறியுள்ளது. 

மேற்கத்திய நாடான ஈரான் மீது இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதில் ஈரானின் உச்ச தலைவரான அலி கமேனி கொல்லப்பட்டார். 

கமேனி மட்டுமின்றி ஈரானின் ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

இந்நிலையில்  ஈரானிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் குறிவைத்து தாக்கப்பட்டது. 

அவரது அலுவலகம் மட்டுமின்றி  விமானப்படை தளபதியின் இருப்பிடமும் கெய்பர் ஷெகான் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இலக்கு வைக்கப்பட்டது. 

இந்த தாக்குதலின் போது நெதன்யாகு அவரது அலுவலகத்தில் இருந்தாரா தற்போது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என கூறியுள்ளது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset