செய்திகள் உலகம்
உடல் பிடிப்புக் கூடத்தில் கழுத்தைத் திருப்பி சிகிச்சை: பெண் பாடகி பிங் சைடா மரணம்
பேங்காக்:
தாய்லந்தில் தோள்பட்டை வலிக்காக உடல்பிடிப்புக் கூடத்திற்குச் சென்ற பெண் பாடகி பிங் சைடா மாண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் கடந்த நவம்பர் மாதம் தோள்பட்டை வலியிருந்து நிவாரணம் பெறுவதற்காக உடல்பிடிப்புக் கூடமொன்றின் உதவியை நாடினார்.
தோள்பட்டை வலியை நீக்கக் கூடத்தில் அவரின் கழுத்தைத் திருப்பி உடல்பிடிப்புச் சேவை அளிக்கப்பட்டது.
2 நாட்ளுக்குப் பிறகு கழுத்தின் பின்புறம் அவருக்கு வலி ஏற்பட்டது. வலது கை வலுவிழந்தது. சில வாரங்களுக்குப் பிறகு அவரது உடல் 50 விழுக்காடு செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
கழுத்து மிகவும் பலவீனமான பகுதி என்றும் அதனைப் பலமாக அழுத்தினால் மூளையையும் முதுகெலும்பையும் இணைக்கும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
கழுத்தையும் முதுகெலும்பையும் பிடித்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்து தலைவலி, வாந்தி, மயக்கம், கை காலில் சோர்வு ஆகியவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டது.
கழுத்தை வலுவாகத் திருப்பும்போது கண் பார்வை பாதிக்கப்படக்கூடும் என்று தாய்லந்து நரம்பியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். எவ்வளவு அழுத்தமாக அல்லது எத்தனை முறை செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் பாதிப்புகள் மோசமாக அமையும்.
உடல்பருமன் அல்லது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை கொண்டவர்களுக்குப் பக்கவாதம் ஏற்பட்டு உடல் செயலிழக்க நேரிடலாம் என்றும் அந்த நிபுணர் எச்சரித்தார்.
- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 12:18 pm
உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன தெரியுமா?
January 17, 2025, 10:04 am
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
January 16, 2025, 9:02 pm
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
January 16, 2025, 8:48 pm
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
January 15, 2025, 4:10 pm
வியாட்நாம் அதன் அரசாங்க தொலைக்காட்சி ஒளியலை சேவையை நிறுத்தியது
January 15, 2025, 1:10 pm
போலி ஜம்ஜம் நீர் விற்பனை: $2.5 மில்லியன் டாலர் லாபம் ஈட்டிய நபர் கைது
January 15, 2025, 11:32 am
சந்தையில் புட்டு விற்பனை செய்யும் டிரம்ப் போல இருக்கும் நபர்: பாகிஸ்தானில் அதிசயம்
January 15, 2025, 10:58 am
தென் கொரியா அதிபர் யுன் சுக் இயோல் கைது: ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை
January 15, 2025, 10:56 am