செய்திகள் விளையாட்டு
போர்த்துகலின் மத்தியத் திடல் தாக்குதல் ஆட்டக்காரர் நானி தனது ஓய்வை அறிவித்தார்
லண்டன்:
போர்த்துகல், மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் மத்தியத் திடல் தாக்குதல் ஆட்டக்காரரான நானி தனது 38-ஆவது வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2007- ஆம் ஆண்டில் நானி மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.
அவ்வாணி இதுவரை நானி 230 போட்டிகளில் விளையாடி 41 கோல்களை அடித்துள்ளார்.
மேலும், இவரின் காலத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணி முதல் பருவ சாம்பியன்ஸ் லீக், நான்கு பிரீமியர் லீக் பட்டங்களையும் இரண்டு லீக் கோப்பைகளையும் வென்றுள்ளது.
கால்பந்து துறையிலிருந்து தாம் விடைபெறும் காலம் வந்து விட்டதால் தாம் கால்பந்து துறையிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக நானி தனது சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்.
2016-ஆம் ஆண்டில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்ற போர்த்துகல் அணிக்காக நானி 112 போட்டிகளில் 24 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகளாக இந்தக் கால்பந்த துறையில் தமக்குப் பல மறக்க முடியாத நினைவுகள் கிட்டியதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும், வாழ்க்கையில் தனக்கு உதவி செய்தவர்கள், தன்னை ஆதரித்த ஒவ்வொரு நபருக்கும் நானி நன்றி தெரிவித்தார்.
- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 11, 2024, 11:51 am
சாம்பியன் லீக்: ரியல் மாட்ரிட் வெற்றி
December 11, 2024, 11:46 am
ஐரோப்பா சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
December 9, 2024, 5:34 pm
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது
December 9, 2024, 9:16 am
ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டி: மலேசியா சமநிலை
December 9, 2024, 8:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
December 8, 2024, 9:36 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல் மாட்ரிட் வெற்றி
December 8, 2024, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்வி
December 7, 2024, 11:41 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி சமநிலை
December 7, 2024, 10:38 am