நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் நாடுகளில் பொருளாதார சிந்தனைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் பங்கேற்பு 

பெனோம் பென்:

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஆசியான் பொறுப்பை மலேசியா ஏற்றுக் கொண்டது. ஆசிய நாடுகளுக்கு பொருளாதார சிந்தனைகளை கொண்டு சேர்த்து புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்த தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு கே எஸ் ஐ வியூக பொருளாதார சிந்தனை மன்றத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் ஆசியான் நாடுகளுக்கு வருகை தந்து பொருளாதார கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.

முதல் கட்டமாக கம்போடிய பிரதமர் மாண்புமிகு ஹுன் சென் அவர்களை சந்தித்ததோடு பொருளாதார மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து கம்போடிய நாட்டின் மூத்த அமைச்சர் டாக்டர் சோக் சிபானா டத்தோஸ்ரீ முஹம்மது இக்பாலுக்கு வரவேற்பு கொடுத்ததோடு சிறப்பும் செய்தார். 

May be an image of 5 people and text

ஆசியான் நாடுகளுக்கு இந்தப் பொருளாதார சிந்தனைகள் குறித்து ஆலோசனை நடத்த தொடர் பயணம் மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார். 

பினாங்கு கவர்னர் துன் அஹமத் ஃபுசி அப்துல் ரசாக் ஆசிய பொருளாதார மாநாட்டை கடந்த மாதம் கோலாலம்பூரில் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset