நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மை டிஜிட்டல், 5ஜி திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோபம்

கோலாலம்பூர்:

மைடிஜிட்டல் திட்டம், இரண்டாவது 5ஜி திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால்  தாம் கோபமடைந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
இது தொடர்பான நேற்றைய கூட்டத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

மேலும் பிரதமரின் இந்த நடவடிக்கை  அமைச்சர், துணையமைச்சர் உட்பட அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு வருடங்களில் என்னைப் பொறுமை இழக்கச் செய்த சிக்கலான விஷயங்கள் இருக்கின்றன. 

நான் என் கோபத்தை கொஞ்சம் கடுமையாகவே நேற்று வெளிப்படுத்தினேன்.

சில நேரங்களில் நமது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அதாவது மைடிஜிட்டல் செயல்படுத்துவது கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாகிறது.

டிஎன்பி, தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு இடையேயான பேச்சுவார்த்தையும்  இதற்கு தாமதமாகி உள்ளது

நிதியமைச்சு ஊழியர்களுடன் ஒரு கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset