
செய்திகள் மலேசியா
இன ரீதியிலான மரண எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்கள்: சுகாதார அமைச்சு விளக்கம்
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானோர் குறித்து சுகாதார அமைச்சு இன ரீதியில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மாறுபட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் இதுகுறித்து அந்த அமைச்சு உடனடியாக விளக்கம் அளித்து, குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்களில் எத்தனை பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்பது தொடர்பில் ஒரு பட்டியலை சுகாதார அமைச்சு அண்மையில் வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இந்தப் பட்டியல் இடம்பெற்று இருந்தது.
அதில், கடந்த ஜனவரி முதலாம் தேதியில் இருந்து அக்டோபர் மூன்றாம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் கொரோனா தொற்றுப் பாதிப்பால் 8,886 மலாய்க்காரர்கள் மரணம் அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், 2,815 சீனர்களும், 1,746 இந்தியர்களும் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பட்டியல் தெரிவித்தது. தவிர, மற்ற இனங்களைச் சேர்ந்த 12,765 பேரின் மரணங்களும் பதிவாகி உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியிருந்தது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி மேலும் ஒரு பட்டியலை வெளியிட்டது சுகாதார அமைச்சு. அதில் இந்த எண்ணிக்கைகள் மாறுபட்டு இருந்தன.
அதாவது, மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இறந்த மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 13, 772 என்றும், சீனர்கள் 4, 753 பேரும், இந்தியர்கள் 2, 502 பேரும், கொரோனா தொற்றுப் பாதிப்பால் இறந்துவிட்டதாகவும் இரண்டாவது பட்டியல் தெரிவிக்கிறது.
இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மற்ற இனத்தவர்களின் மரண எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டி இருந்ததாக சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாகவே மலாய், சீன, இந்தியர்களின் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது அந்த அமைச்சு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm