
செய்திகள் மலேசியா
உள்நாட்டு மக்களுக்கு கிடைக்காத மானிய விலை சமையல் எண்ணெய் எப்படி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது?: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேள்வி
பினாங்கு:
அண்டை நாடுகளுக்கு மானிய விலையில் கிடைக்கும் சமையல் எண்ணெய் கடத்தலும் அதற்காக கூறும் காரணங்களும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு கிடைக்காத மானிய விலை சமையல் எண்ணெய் எப்படி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது? இதற்கு அதிகாரிகளின் பாராமுகம் காரணமா? என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கேள்வி எழுப்பினார்.
பல ஊடகங்கள் இப்பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
இது மலேசியர்களை, குறிப்பாக மானிய விலையில் சமையல் எண்ணெயைப் பெறுவதற்குப் போராடும் ஏழைகள் மற்றும் பி40 பிரிவினரை அதிகளவில் பாதிக்கிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முஹைதீன் கூறினார்.
ஒவ்வொரு மாதமும் 60 மில்லியன் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள், மானிய விலையில் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இது ஒரு குறிப்பிடத்தக்க கசிவை இது குறிக்கிறது என்றார் அவர்.
எண்ணெய் விநியோகம் சமமாகசெய்யப்பட்டால், ஒவ்வொரு மலேசியரும் மாதத்திற்கு இரண்டு சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை மானிய விலையில் வாங்க முடியும்.
இருப்பினும், இது அவ்வாறு இல்லை, ஏனெனில் கிடைக்கக்கூடிய வழங்கல் உத்தேசித்துள்ள பெறுநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஒரு ஆய்வில், மானிய விலையில் சமையல் எண்ணெய் தேவைப்படுபவர்களுக்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று கண்டறியப்பட்டது.
இதை நிவர்த்தி செய்ய மைகார்டு, மை செஜாத்திரா அல்லது ஈ வாலட் போன்ற தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்தி, தகுதியான நபர்கள் மட்டுமே மானிய விலையில் சமையல் எண்ணெயை வாங்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
இந்த நோக்கத்திற்காக சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த பி.ப சங்கம் பரிந்துரைக்கிறது.
மேலும், அண்டை நாடுகளுக்கு சமையல் எண்ணெய் கடத்தலை தடுக்க, அமலாக்க நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்து வலுப்படுத்த வேண்டும்.
மானிய விலையில் கிடைக்கும் எண்ணெய் உண்மையிலேயே தேவைப்படுவோரை சென்றடைவதை உறுதிசெய்ய இன்னும் தீர்க்கமான, பயனுள்ள நடவடிக்கை தேவை.
மலேசிய மக்கள் மீது தீங்கு விளைவிக்கும் கடத்தல் பிரச்சினையை கையாள்வதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 11:48 pm
சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு வெறுப்பையும் மதவெறியையும் நிராகரிக்க வேண்டும்: பிரதமர்
September 16, 2025, 11:46 pm
இந்தியாவில் விபத்தில் சிக்கிய 12 மலேசியர்களை வெளியுறவு அமைச்சு கண்காணித்து வருகிறது
September 16, 2025, 11:44 pm
இந்தியா வழியாக ஐரோப்பாவிற்கு பயணிக்கும் மலேசியர்களுக்கு கூடுதல் பரிசோதனை
September 16, 2025, 7:34 pm
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 மலேசிய சுற்றுலாப் பயணிகள் படுகாயம்
September 16, 2025, 7:33 pm
மடானி தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் 2,257 பேர் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 7:31 pm
பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டு கூட்டம்: அக்டோபர் 8இல் நடைபெறுகிறது
September 16, 2025, 7:18 pm
மொழி அழிவது ஓர் இனத்தின் அழிவைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
September 16, 2025, 3:23 pm
சபா பேரிடர்; 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது: இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு
September 16, 2025, 11:56 am