நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைட் சாடிக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் அதிகப்பட்சமானது அல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்:

நம்பிக்கை மீறல், பணமோசடி குற்றத்திற்காக சைட் சாடிக்கிற்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகள் அதிகபட்சமானது அல்ல என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்ஹர் அப்துல் ஹமீத் கூறினார்.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் உட்பட மேற்கண்ட தண்டனைகள் விதிக்கப்பட்டது.

அவர் இத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் சைட் சாடிக் சமூகத் தலைவராகவும், இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்வதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது.

குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த  முன்மாதிரியாக மாற வேண்டும் என்று அசார் 22 பக்க தீர்ப்பில் கூறினார்.

இது அவரது முதல் தவறு என்பதால், அவர் தனது தவறைத் திருத்திக் கொள்ளவும், என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்திக்கவும் இன்னும் நேரம் உள்ளது.

ஆகையால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் அதிகமானது அல்ல என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset