நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘ஊர்குருவி’

சென்னை:

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘ஊர்குருவி’ படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் ‘லிஃப்ட்’ வெளியாகி கவனம் ஈர்த்தது. 

‘ஆகாஷ்வாணி’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து முடித்துள்ள கவின், அடுத்ததாக நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஊர்குருவி’ படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப் படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ வெற்றி படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடமும் விக்னேஷ் சிவனிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இயக்குகிறார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தென்மாவட்டங்களில் ‘ஊர்குருவி’ படத்தை படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

+ - reset